Google, தனது புதிய Nano Banana Pro எனும் மேம்படுத்தப்பட்ட AI பட உருவாக்கும் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Gemini 3 Pro அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், “உங்கள் கற்பனைகளை ஸ்டூடியோ தரத்திலான படங்களாக மாற்றும் திறன்” கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
முந்தைய Nano Banana மாடல், 3D-பாணியிலான படங்களை உருவாக்கும் திறனால் சமூக ஊடகங்களில் வைரலானது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, இப்போது வெளியான Nano Banana Pro, பல புதிய சக்திவாய்ந்த அம்சங்களுடன் வந்துள்ளது. இது ஒரே நேரத்தில் 14 படங்களை இணைத்து முற்றிலும் புதிய காட்சிகளை உருவாக்கும் திறன் பெற்றுள்ளது. மேலும், ஒரே படத்தில் 5 பேர் வரை துல்லியமாக இணைக்க முடியும்.
இந்த மாடல் போஸ்டர்கள், அழைப்பிதழ்கள், இன்ஃபோகிராபிக்ஸ், சமூக ஊடக உள்ளடக்கங்கள் போன்றவற்றை உருவாக்க மிகவும் ஏற்றது. முக்கியமாக, படங்களில் நேரடியாக படிக்கக்கூடிய எழுத்துகளை – டேக்லைன், பத்தி போன்றவற்றை – பல மொழிகளில் சேர்க்க முடியும். இது உலகளாவிய பயனர்களுக்கு மிகப்பெரிய வசதியாக அமைகிறது.
பயனர்கள் படங்களின் ஒளி, நிறம், கேமரா கோணம், ஃபோக்கஸ், போக்கே எஃபெக்ட் போன்றவற்றை எளிதாகத் தனிப்பயனாக்கலாம். பகல்-இரவு மாற்றம், கலர் கிரேடிங் போன்ற மேம்பட்ட எடிட்டிங் வசதிகளும் இதில் உள்ளன. மேலும், 4K ரெசல்யூஷன் வரை, பல்வேறு aspect ratio-களில் படங்களை உருவாக்க முடியும்.
நம்பகத்தன்மையை உறுதி செய்ய, Google C2PA (Coalition for Content Provenance and Authenticity) metadata-ஐ இந்த மாடலில் இணைத்துள்ளது. இதன் மூலம், AI-யால் உருவாக்கப்பட்ட படங்களை deepfake-களிலிருந்து தனித்து அடையாளம் காண முடியும். இந்த நம்பகத் திருட்டு முறை, TikTok உள்ளிட்ட பல தளங்களாலும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய Nano Banana Pro, உலகளவில் Gemini ஆப்பில் “Create image” என்ற விருப்பத்தின் கீழ் இலவசமாக முயற்சி செய்ய கிடைக்கிறது. எனினும், இலவச பயன்பாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட quota வரம்பு உள்ளது. Google AI Plus, Pro அல்லது Ultra சந்தாதாரர்களுக்கு கூடுதல் உருவாக்க வரம்புகளும், மேம்பட்ட அம்சங்களும் வழங்கப்படும்.
இந்த வெளியீடு, AI-அடிப்படையிலான பட உருவாக்கத் துறையில் Google-ஐ முன்னணி நிறுவனமாக நிலைநிறுத்தும் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.



